நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்குரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’பரசாக்தி’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியானது.
படத்தை இயக்க சுதா கொங்குராவிற்கு 15 கோடி ரூபாய் ஊதியம் ஒப்பந்தம் செய்த நிலையில் 8.39 கோடி ரூபாய் ஊதிய பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த தொகையை செலுத்த கோரியும் சுதா கொங்குரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ’பராசக்தி’ படத்தின் உரிமையை மூன்றாம் நபருக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், ’பராசக்தி’ படத்தை OTT, தொலைக்காட்சி உரிமம் வழங்கியதன் மூலம் கிடைத்த வருமானத்தின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, மனுவிற்கு ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
