“தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
மனுதாரரான பட தயாரிப்பாளர் தரப்பு:-
கர்நாடக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் அடிப்படையில் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அந்த விஷயங்களை ஏற்கிறோம்.
நீதிபதிகள் :-
அப்படியெனில் வழக்கை முடித்து வைத்து விடலாமா?
மனுதாரர் மகேஷ் ரெட்டி தரப்பு :-
இதுபோன்று தொடர்ச்சியாக பல நேரங்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது எனவே வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வகுக்க வேண்டும்.
மேலும் படம் இவ்வளவு தாமதமாக வெளியிடும் போது அதன் மார்க்கெட் போய் விடுகிறது எனவே அதற்கான இழப்பீட்டையும் உறுதி செய்யும் வகையில் வழிகாட்டு நெறிமுறை உருவாக்க வேண்டும்.
கர்நாடக அரசு :-
இந்த விவகாரத்தில் the film chambers of commerce மன்னிப்பு கூறியதோடு படத்தை வெளியிட மாட்டோம் என்று அவர்களாகவே தெரிவித்திருந்தார்கள் அவர்கள் வெளியிடும் பட்சத்தில் நாங்கள் எந்த வகையிலும் பாதுகாப்பு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்
நீதிபதிகள்:-
தடையில்லா சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் வெளியிடுவதாக இருந்தால் அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒரு மாநிலத்தின் கடமையாகும்
இதுபோன்று திரையரங்குகளை தீக்கிரையாக்குவோம் படத்தை வெளியிட மாட்டோம் என்று சில வன்முறையாளர்கள் கூறினால் அந்த மிரட்டலை அடக்க வேண்டியது மாநிலத்தின் கடமையாகும்
கர்நாடக அரசு ;-
திரைப்படம் வெளியாவதற்கு யாரேனும் அச்சுறுத்தலாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
நீதிபதிகள் :-
ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவது கூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகளும் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?
நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது.
கர்நாடகா ஃபிலிம் சேம்பர் தரப்பு வழக்கறிஞர்:-
கமலஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிபதிகள்:-
இதனை ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
ஏதேனும் கருத்து தெரிவித்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். பதில் அறிக்கை விடலாம். அதற்காக திரைப்படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது. சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர்.