இந்தி முன்னணி நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள புதிய படம் ‘சித்தாரே ஜமீன் பர்’, ஜூன் 20ஆம் தேதி வெளியானது. ஆர். எஸ். பிரசன்னா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெனிலியா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி மொழியில் உருவாகிய இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மனவளர்ச்சி குறைபாடுள்ளோருக்கான கூடைப்பந்து பயிற்சியாளராக நீதிமன்றத்தின் ஆணைப்படி நியமிக்கப்படும் ஆமிர்கான் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் கதையம்சம் இப்படத்திற்கு முக்கிய வலுவாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் ஆமிர்கான் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. ஆனால், அந்த சந்திப்பின் காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.