சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘அரசன்’ என பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ‘STR 49’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. கேங்ஸ்டர் சம்பந்தமான இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக புரோமோ விடீயோ வெளியாகாமல் உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான தலைப்பு ’அரசன்’ என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு, ‘அரசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது.
போஸ்டரில் சிலம்பரசன் இரத்தத்தால் நனைந்த சட்டையுடன் காட்சியளிக்கிறார். அவர் கையில் கத்தியை ஏந்தி, ஒரு சைக்கிளுக்கு அருகில் நிற்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.