Close Menu
    What's Hot

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தடையம் முதல் இக்கிஸ் வரை!. இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!
    சினிமா

    தடையம் முதல் இக்கிஸ் வரை!. இந்த வாரம் நீங்கள் தவறவிடக்கூடாத OTT படங்கள் இதோ!

    Editor web3By Editor web3February 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    OTT Releases
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வார இறுதி நெருங்கிவிட்டாலே சினிமா ரசிகர்களின் கவனம் OTT  பக்கமே திரும்பும். அந்த வகையில் இந்த வாரம் நாளை (பிப்ரவரி 27) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் சுவாரஸ்யமான திரைப்படங்களும், இணையத் தொடர்களும் (Web Series) வெளியாகின்றன.

    அந்தவகையில், தமிழ் ரசிகர்களுக்காக ‘தடையம்’ (Thadayam) இணையத் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் ‘ஹனி’ (Honey) சன் நெக்ஸ்ட் (Sun Nxt) தளத்திலும், ‘டாட்டர் ஆஃப் பிரசாத் ராவ் காணபடுதலேது’ ஜீ5 தளத்திலும் வெளியாகின்றன.

    தடையம்: 1999ல் தமிழ்நாடு, ஆந்திரா பார்டரில் நடந்த தொடர் கொலைகளைப்பற்றி இன்வெஸ்டிகேசன் செய்யும் ஒரு போலீஸ் ஆபீசரின் கதை இது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அதியமான் ஆக சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆக ஷிவாதா நடிக்கிறார்கள் .இது ஒரு யு/ஏ படம் 16+

    ஒரு விறுவிறுப்பான புலனாய்வு க்ரைம் த்ரில்லர் (Investigative Crime Thriller) தொடராகும். இத்தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    பெயருக்கேற்றபடி, ஒரு மர்மமான கொலை அல்லது குற்றச் சம்பவத்தை மையமாக வைத்து இத்தொடர் நகர்கிறது. ஒரு குற்றவாளியைப் பிடிப்பதில் ‘தடையங்கள்’ (Clues) எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்தத் தடையங்களைச் சேகரிக்கும் போது ஏற்படும் சவால்களையும் இத்தொடர் விரிவாகப் பேசுகிறது. காவல்துறை அதிகாரிகளின் நுணுக்கமான விசாரணை முறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இத்தொடரின் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹனி: தெலுங்குப்படமான இதுதமிழ் டப்பிஙகில் வெளியாகிறது. நவீன் சந்திரா நாயகன் ஆக ,திவ்யா பிள்ளை நாயகி ஆக நடித்த சைக்கலாஜிக்கல் திரில்லர் படம் இது.சமீப காலங்களில் இவரது ஸ்க்ரிப்ட் செலக்சன் அருமையாக இருந்து வருகிறது. மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மலையாளத்தில் ‘ரோஸ்லின்’ (Roslin) ஹாட்ஸ்டார் தொடராகவும், ‘குறிஞ்சி’ (Kurinji) மனோரமா மேக்ஸ் தளத்திலும் வெளியாகின்றன. கன்னட ரசிகர்களுக்கு ‘க்ஷேத்ரபதி’ (Kshetrapati) ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

    இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள்: இந்தி மொழியில் ‘இக்கிஸ்’ (Ikkis) மற்றும் ‘அக்யூஸ்டு’ (Accused) ஆகிய படங்கள் முறையே பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் தளங்களில் வெளியாகின்றன. மேலும், ஜீ5 மற்றும் ஹாட்ஸ்டாரில் ‘அந்தா பியார் 2’ (Andha Pyaar 2), ‘சங்கமர்மார்’ (Sangamarmar) போன்ற தொடர்கள் வெளியாகின்றன. பெங்காலியில் ‘கிரிதி ராய்’ (Kiriti Roy) பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

    Accused: கொங்கனா சென் சர்மா, பிரதீபா நடித்துள்ள சைக்கலாஜிக்கல் மிஸ்டரி த்ரில்லர். ஒரு மகப்பேறு மருத்துவரின் மனைவிக்குத் திருமண வாழ்க்கையில் வரும் மிரட்டல்களைச் சுற்றியே இதன் திரைக்கதை நகர்கிறது.

    ஆங்கிலம் மற்றும் சர்வதேச வெளியீடுகள்: ஆங்கிலப் படங்களைப் பொறுத்தவரை பிரைம் வீடியோவில் ‘தி பிளஃப்’ (The Bluff), ‘தி சம்மர் புக்’ (The Summer Book) ஆகியவை வெளியாகின்றன. ஹாட்ஸ்டாரில் ஹாரர் ரசிகர்களுக்காக ‘பிளாக் போன் 2’ (Black Phone 2) மற்றும் ‘பியூகோனியா’ (Bugonia) உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டுகின்றன. நெட்ஃபிக்ஸ் தளத்தில் புகழ்பெற்ற ‘ஃபாலிங் ஸ்கைஸ் சீசன் 1’ (Falling Skies S1) மற்றும் ஜப்பானிய அனிமேஷனான ‘பாக்கி டூ’ (Baki Dou) ஆகியவையும் வெளியாகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் டெல்லியின் பெயர் மாற்றமா?. மகாபாரத காலம் முதல் இன்றுவரை எத்தனை முறை மாற்றப்பட்டது?
    Next Article 7 தொகுதிகள்; தனிச்சின்னம் கேட்கும் ஐஜேகே!. பாரிவேந்தர் டிமாண்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    February 26, 2026

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    February 26, 2026

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    February 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டி20 உலகக் கோப்பை 2026!. இந்தியா அரையிறுதிக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

    சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    கிரிஷ் சோடங்கர் – செல்வப்பெருந்தகை மாறுபட்ட கருத்து!. குழப்பத்தில் தொண்டர்கள்!.

    7 தொகுதிகள்; தனிச்சின்னம் கேட்கும் ஐஜேகே!. பாரிவேந்தர் டிமாண்ட்!

    Trending Posts

    2026 தேர்தலில் இருந்து துரைமுருகன் விலகலா?. இளைஞர்களுக்கு வாய்ப்பா?. திமுக திட்டம் என்ன?

    February 26, 2026

    மாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!

    February 26, 2026

    போராளி நல்லக்கண்ணு: போராட்டம்.. சிறைவாசம்.. எளிமை… வேட்கை…

    February 26, 2026

    8ம் வகுப்பு புத்தகத்தில் சர்ச்சை பாடம்!. உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மத்திய அரசு!.

    February 26, 2026

    இந்தியா-இஸ்ரேல் உறவு!. முதல் உலகப்போரை நினைவுப்படுத்திய பிரதமர் மோடி!

    February 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.