Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  
    தமிழ்நாடு

    நேர்காணல் இல்லை!. 80 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயார்!. தவெக நிர்வாகிகள் கடும் அதிருப்தி!.  

    Editor web3By Editor web3February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay speech 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கட்சித் தலைவர் விஜய், எவ்வித நேர்காணலையும் நடத்தாமல், முதற்கட்டமாக 80 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் முடிவு விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த முதற்கட்டப் பட்டியல் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் ரகசியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாகத் தேர்தல் களத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முன்பு தலைமை நேரடியாகவோ அல்லது குழுக்கள் மூலமாகவோ நேர்காணல் நடத்தித் தகுதியானவர்களைத் தேர்வு செய்வது வழக்கம். ஆனால், தவெக-வில் அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் பட்டியல் தயாராகியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

    நேர்காணல் நடத்தப்பட்டால் தங்களது திறமையையும், தொகுதியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் தலைமையிடம் நிரூபிக்கலாம் என்று நம்பியிருந்த பல நிர்வாகிகள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். மாவட்டச் செயலாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதோ என்ற அச்சம் அவர்களிடையே எழுந்துள்ளது. இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது வரும் நாட்களில் கட்சிக்குள் சில சவால்களை உருவாக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிஷ் சோடங்கர் – செல்வப்பெருந்தகை மாறுபட்ட கருத்து!. குழப்பத்தில் தொண்டர்கள்!.
    Next Article சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!. அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான கோரிக்கைகள்!
    Editor web3
    • Website

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.