நடிகர் சூர்யா ’கங்குவா’ பட தோல்விக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ரெட்ரோ’ படத்தில் சூர்யா நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வினை அடிப்படையாக கொண்டு ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவானது. கடந்த மே மாதம் 1-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சூர்யாவின் ’2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ப்ரொடக்ஷன்ஸ்’ இணைந்து தயாரித்து வெளியான ’ரெட்ரோ’ உலகம் முழுவதும் ரு.235 கோடி வசூலை பெற்றது. ஜூன் 5 ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’ரெட்ரோ’ வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் உறுதியான தகவல் இல்லை.
அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை சூர்யா கொடுக்க முடியாததால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் உள்ளனர். அவரது 46-வது படத்தை ஆ.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவரது 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’பட இயக்குநர் ’வெங்கி அட்லூரி’ இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
’சித்தாரா என்டர்டெயின்மெண்ட்’
நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரியுடன், இருக்கும் புகைப்படத்தை ஜி.வி. தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதற்கு முன்பு வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களுக்கு ஜி.வி. தான் இசையமைத்திருந்தார். அதேபோல சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தில் ஜி.வி. இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.