ஒரே ஒரு படம், ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட ரசிர்களையும் தனது கிறங்க வைக்கும் அழகால் கட்டிப்போட்டவர் கயாடு லோஹர்.
ட்ராகன் படம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கதாநாயகன் ப்ரதீப் ரங்கநாதன் ஆகியோருக்கு கொடுத்த வரவேற்பைக் காட்டிலும் கதாநாயகி கயாடு லோஹருக்கு அபரிமிதமான வரவேற்பை பெற்றுத் தந்தது. வழித்துணையே என்ற ஒரு பாடலும் அதில் அவரது அழகும், திருமண நிச்சயதார்த்த விழாவில் அவர் போட்ட ஆட்டமும் கயாடு லோஹர் மீது இளைஞர்களை பித்தாக்கியது.
அஸ்ஸாமில் பிறந்து புனேவில் வசித்து வருபவர் கயாடு லோஹர். 2021-ம் ஆண்டு கன்னடத்தில் முகில்பேட்டை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் 2022-ல் மலையாளத்தில் நடித்துப் பார்த்தார், அப்போதும் வரவேற்பு இல்லை. அதன்பிறகு தெலுங்கிலும், மராத்தியிலும் கூட நடித்தார். எதனாலோ அந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
ஆனால் தமிழ் படவுலகம் கயாடு லோஹரை தாங்கி பிடித்துக் கொண்டது. ஒரே ஒரு படம் தான் ட்ராகன்.. அதன்பிறகு கயாடு லோஹர் திரும்பி பார்க்க நேரமில்லாத வகையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ஒரு நடிகையை தமிழ் ரசிகனுக்கு பிடித்து விட்டால் போதும், கோயில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தி விடுவான். குஷ்பூ, நமீதா என்றொரு வரிசை ஏற்கனவே உண்டு.
சமீபத்திய ஹாட் லிஸ்ட் நம்ம கயாடு லோஹர். ட்ராகனைத் தொடர்ந்து அதர்வா உடன் இதயம் முரளி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இப்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாசுடன் இம்மார்ட்டல் (IMMORTAL) என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதில் கயாடு லோஹரின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.