“தக் லைஃப்” படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு உறுதயளித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உட்பட பலர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி கர்நாடகா உட்பட உலகம் முழுவதும் வெளியனது தக் லைஃப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என கமல்ஹாசன் தெரிவித்திருந்தது பேசு பொருளானது.
கன்னட அமைப்பினர் பலர் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் எனக் கூறி, கமல்ஹாசனின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசன், நான் தவறாக எதுவும் கூறவில்லை ஆகையால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக் கோரி கமல்ஹாசன் கர்நாடக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கோர சொல்வது நீதிமன்றத்தின் வேலை அல்ல, என கர்நாடக நீதிமன்றத்தை சாடியது. அத்தோடு இது தொடர்பாக பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ”சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு எடுக்கும். தக் லைஃப் படத்தை பார்க்க வருவோருக்கும் திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல்” செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version