தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான குபேரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்த இப்படத்தில், தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருந்தார்.

ரூ.130கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் 18-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
