நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி, ’விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ’விடுதலை’ படத்திற்கு கடைநிலை காவலராக பக்காவாக பொருந்தியிருந்தார் சூரி. அப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் சூரியின் கதாபாத்திரம் அதிகளவு இல்லை என்ற அப்செட் ரசிகர்களிடம் இருந்தது.
தொடர்ந்து ’கொட்டுக்காளி’, ’கருடன்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டு இருக்கும் சூரியின் அடுத்தப் படமாக வெளிவந்தது ’மாமன்’ திரைப்படம். விலங்கு வெப் சீரிஸை இயக்கி இருந்த பிரசாந்த் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை குறிப்பாக தாய்மாமன் என்ற உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம், குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த 26-ம் தேதி வெளியான இப்படம், ரூ.10கோடியில் எடுக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுவதும் இப்படம் சுமார் ரூ.40 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ’ஜூன் இரண்டாவது வாரத்தில் ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.