தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், சினிமாவில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி விஜய்சேதுபதியாக அசத்தியவர், ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஆகையால் அவரது பெயர் மாஸ்டர் மகேந்திரன் என அழைக்கப்படுகிறார்.
அன்மையில் வெளியான 29 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மகேந்திரன். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. பட புரோமோஷனுக்காக கொடுக்கப்படும் பேட்டிகளின் போது அவர் பேசும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தும். அவ்வாறு சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, மின்வெட்டு குறித்து பேசியிருந்தார். சில மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா?”, “தேவைப்பட்டால் என் வீட்டு மின்சாரத்தைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள்” என பேசியிருந்தது பலரது எதிர்ப்பை சம்பாதித்தது.
மகேந்திரனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அவர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய காணொளிகளில் தாம் கூறிய கருத்துகள் முழுமையாக இடம்பெறுவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும், “நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. மின்சாரத் தேவையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரமே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதையும்,
கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சூரிய ஒளி மின்சார திட்டங்களை ஏன் விரிவுபடுத்தக் கூடாது என்பதையுமே நான் குறிப்பிட்டேன்”என விளக்கமளித்துள்ளார்.
