‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வித்தியாசமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து புதிய பிரம்மாண்டமான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் மாதவனும் இப்படத்தில் சேர வாய்ப்பு உள்ளது.
படத்தின் கதைப்போக்கு வகையில், முக்கியமான காட்சிகள் வாரணாசி நகரில் நடைபெறுவதாக இருக்கின்றன. ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், அங்கு நேரடி படப்பிடிப்பு சாத்தியமாகாத நிலையில், ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ரூ.50 கோடி மதிப்பில் வாரணாசியை பிரதிபலிக்கும் பிரம்மாண்டமான செட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன், அடுத்த மாதம் கென்யாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் படத்தின் முக்கியமான ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இதில் மகேஷ்பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா கலந்துக்கொள்ளும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.