இன்றைய சூழலில் ஒரு படத்தை கசியவிடாமல் படப்பிடிப்பு நடத்தி, அதனை திரையில் வெளியிடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. முன்பெல்லாம் தியேட்டருக்கு வந்த பிறகே அப்படம் இணையத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வெளியாகும். ஆனால் இன்று அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதால், படப்பிடிப்பு தளத்திலேயே வீடியோக்களை எடுத்து இணையத்தில் கசிய விட்டு விடுகின்றனர்.

அந்த வகையில், நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பு காட்சிகள் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இருவரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் பதிவில், ”படப்பிடிப்பு தளங்களிலிருந்து கசிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், இவ்வாறு பதிவு செய்தல் மற்றும் அதை பரப்புதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரித்திருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version