1999 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படையப்பா திரைப்படம் சுமார் 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 4k ரெசல்யூசனில் இந்த படம் ரீ மாஸ்டர் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் ராதாரவி மணிவண்ணன் செந்தில் என பல்வேறு நட்சத்திர பட்டாளஙகள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.கே எஸ் ரவிக்குமாரின் கதை திரைக்கதை வசனம் ஒரு பக்கம், மறுபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைல் மற்றும் ஜனரஞ்சகுமான் நடிப்பு என்று பார்த்தால் இன்னொரு பக்கம் ஏ ஆர் ரகுமானின் மிரட்டலான இசை. சோகம் ஆனந்தம் உத்வேகம் என அனைத்து ஏரியாக்களிலும் ஏ ஆர் ரகுமான் தனது இசையில் மிரட்டி இருப்பார்.
வெற்றிக்கொடி கட்டு என்கிற பாடல் இன்றுவரை பலருக்கும் உத்வேகத்தையும் உந்து சக்தியும் கொடுக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பலருக்கும் பிடித்த இந்த படையப்பா திரைப்படம் மீண்டும் டிசம்பர் 12ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்றனர்.

சிறுவயதில் தொலைக்காட்சிகளில் பார்த்த இந்த திரைப்படத்தை, இம்முறை தியேட்டரில் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதால் இளைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
