“திரைப்படத்தில் ஆண் பெண் என்ற விகிதம் போய்விட்டது. நாங்கள் இயக்குனர்கள் அவ்வளவு தான். இதில் எந்த பேதமும் இல்லை. தற்பொழுது அந்த சூழல் வந்து விட்டது என்று பார்க்கிறேன்” என இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
“திரைப்படத்தில் ஆண் பெண் என்ற விகிதம் போய்விட்டது. நாங்கள் இயக்குனர்கள் அவ்வளவு தான். இதில் எந்த பேதமும் இல்லை. தற்பொழுது அந்த சூழல் வந்து விட்டது என்று பார்க்கிறேன்” என இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘பராசக்தி’ திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கூறுகையில், “வள்ளுவர் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள செட் போன்றது தான் திரைப்படம் இருக்கும். நிறைய பொதுமக்கள் இங்கு புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர்.
1960களில் எப்படி இருந்தது என்று தற்பொழுது உள்ள ஜென்சி இளைஞர்களுக்கு தெரியாது எனவே படத்தின் இதுதான் காட்டப்பட்டுள்ளது. அந்த காலத்தில் பயணம் மேற்கொள்வதோ தகவல் அனுப்புதோ எவ்வளவு கடினம் என்று புரிந்து கொள்ள முடியும்.ர்
பராசக்தி திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவிப்பார்கள் திரைப்படத்தில் ஆண் பெண் என்ற விகிதம் போய்விட்டது. நாங்கள் இயக்குனர்கள் அவ்வளவு தான். இதில் எந்த பேதமும் இல்லை. தற்பொழுது அந்த சூழல் வந்து விட்டது என்று பார்க்கிறேன். அப்படி வரவில்லை என்றால் அதை நோக்கி நாம் செல்ல வேண்டும். தடைகளை உடைத்து போக முடியும் கஷ்டம் உள்ளது. ஆனால் அதை தாண்டி நாம் செல்ல முடியும்.ஆண் பெண் என்று பாகுபாடு இல்லை. அப்படி இருந்தா என்னை டாப் ஹீரோஸ் அணுக மாட்டார்கள். சிவாஜியின் ‘பராசக்தி’ திரைப்படம் எப்படி அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி இருக்குமோ, இதுவும் அதே போன்ற எமோஷனல் அடங்கிய படம்” என்றார்.
