Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார் 3’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான தகவல்!
    சினிமா

    ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார் 3’ ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா? – வெளியான தகவல்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    avatar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய ‘Avatar: Fire and Ash’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், உலகளவில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
    ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அவதார் ஃபையர் அன்ட் ஆஷ்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவதார் சீரிஸின் 3-வது பாகமாக இந்தப் படம் உருவானது. ஆனால், ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே இந்தப் படம் பெற்று வருகிறது.
    ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோய் சால்டனா, ஸ்டீஃபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அவதார்’. இந்தப் படம் கடந்த 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைஈட்டியது.
    இதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘Avatar: The Way of Water’ என்ற பெயரில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘அவதார்’ சீரிஸின் 3-வது பாகம், ‘Avatar: Fire and Ash’ என்ற பெயரில் வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது. மேலும் 2 பாகங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
    அண்மையில் அளித்த பேட்டியில் ‘அவதார் 4’ படத்தை இயக்கும் எண்ணமில்லை என்றும் கூறியிருந்தார். ‘அவதார் 3’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன் திரையனுபவம் சிலாகிக்கப்படுகிறது. அட்டகாசமான கிராஃபிக்ஸ் பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. இதனால் படத்தின் வசூல் என்பது குறையவில்லை.
    இதனால் இந்தப் படம் முதல் நாள் உலக அளவில் ரூ.500 கோடிக்கும் மேலாகவும், இந்தியாவில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பெரும் குறையாக அதன் நீளம் கருதப்படுகிறது. ‘அவதார் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை ‘அவதார் 3’ முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    இந்நிலையில் ‘அவதார் 3’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் டிஸ்னி சேவைகளை வழங்கும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்தப் படம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருமணமான பெண்கள் ஒருபோதும் இந்த தவறை செய்யாதீர்கள்!.
    Next Article “சினிமாவில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை” – இயக்குநர் சுதா கொங்கரா
    Editor TN Talks

    Related Posts

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026

    அனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.