ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படத்தினை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகினார் சுந்தர்.சி. இதனால் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

‘ரஜினி173’ படத்தினை தயாரிக்கவுள்ளது ராஜ்கமல் நிறுவனம். இதனால் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். அதில் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் கூறிய கதை ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே பிடித்திருக்கிறது. இதனால் விரைவில் இந்தக் கூட்டணி உருவாகும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

ரஜினி – ராஜ்கமல் நிறுவனம் – ராம்குமார் கூட்டணி குறித்த அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் தெரிகிறது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். மேலும், அப்படத்தின் மூலம் தேசிய விருதினையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version