கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ்டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் பிரதீப்பின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இளைஞர்கள் கல்லூரியில் படிக்காமல் அரியர் வைத்து கெத்து காட்டி திரிந்தால் பிற்காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை 2k கிட்ஸ்களுக்கு எடுத்துரைக்கும் படியாக இப்படம் அமைந்திருந்தது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 148 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர் வெற்றியை தொடர்ந்து அவரது அடுத்த படம் பற்றின அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னனி இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”(LIK) என்ற படத்தில் நடித்து வருகிறார். ’செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ மற்றும் ’ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்’ இணைந்து தயாரித்துள்ள் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி செட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்ற நிலையில், இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த மாதம் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், எல்.ஐ.கே திரைப்படம் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போஸ்டருன் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version