பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ‘மா வந்தே’ என்ற தலைப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை வீர் ரெட்டி தயாரிக்கிறார். கிராந்தி குமார் இயக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
இந்தநிலையில், ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை ‘மா வந்தே’ திரைப்படத்தில் மிகவும் சிறப்பான வகையில் காட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம், இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
