SIR மூலமாக நீக்கப்பட்ட சுமார் ஒரு கோடி வாக்காளர்களில் 50 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று சீமான் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், SIR மூலமாக ஒரு கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது எப்படி திருத்தம் என்று சொல்ல முடியும். குறுகிய காலத்தில் விடுபட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து எப்படி மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியும். எப்படியும் பிப்ரவரியில் தேர்தல் அறிவித்துவிடுவார்கள்.

ஏற்கனவே டிசம்பர் மாதமும் முடிந்துவிட்டது, மக்களின் அடிப்படை உரிமையே வாக்கு மட்டும்தான். அதுவே கேள்விக்குறியாகி இருக்கிறது. பீகார் 81 லட்சம் வாக்குகள் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவில் நீக்கப்பட்டது. தற்போது பாஜகவுக்கு எதிரான 40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், இரட்டை வாக்குகளை மட்டுமே நீக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் எப்படி இவ்வளவு வாக்குகளை சேர்க்க முடியும். வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் போய், ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் காலம் வந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version