கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் இருந்து மேல் எழும்பிய சில நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து வெடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒரு இந்தியர் மட்டும் உயிர்பிழைத்தார். மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் என மொத்தம் இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர சம்பவம் நாடு முழுவதுமின்றி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த அவரிடம் செய்தியாளர்கள் ஆமதாபாத் விமான விபத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு “ “அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம்.. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும் ” என்றார்.