தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வெளியான கருப்பு திரைப்படம் தியேட்டர்களில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சூர்யா வந்தாலும் கூட கடவுளாக அவரது மிரட்டலான நடிப்பு மக்களிடம் பெரிதும் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் & சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்திருந்தார் நடிகர் சூர்யா. சூர்யாவின் 46வது படமான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
