ராமயணத்தை தழுவி அவ்வப்போது பல்வேறு படங்கள் எடுக்கப்பட்டாலும், அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது மீண்டும் ராமாயண படம் எடுக்கப்படுகிறது. பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாவின் பெரிய பெரிய நடிகர்கள் இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் பான் இந்தியா நடிகையான சாய் பல்லவி ஆகியோர் இணைந்து ராமயணம் படத்தில் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படத்தில், ராமராக ரன்பீரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.
இரண்டு பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் கசிந்து வைரலாகும். இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு நாளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.