இந்திய திரை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்பிரிட் திரைப்படத்தின் பூஜை இன்று நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் புகழ் திரிப்தி திம்ரி நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகை மடோனா செபாஸ்டின், பிரகாஷ்ராஜ், நடிகை காஞ்சனா மற்றும் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அனைவராலும் டான் லீ என்று செல்லமாக அழைக்கப்படும் கொரியாவைச் சேர்ந்த பிரபல சர்வதேச நடிகரான மா டோங் சியோக் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்துள்ள பூஜையில் இத்திரைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி அவர்கள் துவங்கி வைத்தார். பூஜையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் புஷன் குமார், கிருஷண் குமார் மற்றும் பிராணாய் ரெட்டி வங்கா மற்றும் கதாநாயகி திரிப்தி திம்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
https://x.com/InSpiritMode/status/1992497101021073598?t=wSYraeUrsNiidN19EUiJPA&s=09
இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு சர்வதேச வில்லனை எப்படி வீழ்த்துகிறார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இன்று நடந்து முடிந்துள்ள பூஜையில் நடிகர் பிரபாஸ் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர் கெட்டப்பை வெளியே காட்டக்கூடாது என்பதற்காக தான் என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. பிரபாஸ் இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது சுவாரசியமான தகவல்.
சந்தீப் ரெட்டி வங்கா விஜய் தேவர் கொண்டவை நாயகனாக வைத்து எடுத்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக இந்தி மொழி ரீமேக்கை நடிகர் ஷாஹித் கபூரை வைத்து அவரே இயக்கினார். அதனைத் தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூரை வைத்து அவர் இயக்கிய அனிமல் திரைப்படமும் நல்ல வரவேற்பையும் அத்தோடு 900 கோடிக்கு மேல் வசூலையும் ஈட்டியது.
இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் பிரபாஸ் இணையும் இந்த ஸ்பிரிட் திரைப்படத்திற்கான வரவேற்பு இப்பொழுதே விண்ணை தொட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
