நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு கரம் பிடித்தார். நடிகர் நாகா சைதன்யா செய்தது தவறு என்றும் அவர் சமந்தாவை விவாகரத்து செய்து தற்பொழுது இன்னொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். அவர் எப்படி செய்திருக்கக் கூடாது என்றும் பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில் தற்பொழுது நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோரு அவர்களை டிசம்பர் 1 அன்று திருமணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவருடைய திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ராஜ் நிதிமோரு அவருடைய மனைவியை 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. சமந்தா மட்டும் ராஜ் நிதிமோரு திருமணம் செய்த புகைப்படத்தை வெளியிட்ட பின்னர் இந்திய அளவில் ட்ரண்ட் செய்யப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜ் நிதிமோரு அவர்களின் முன்னாள் மனைவியான ஷியாமலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டு இருக்கிறார். அதில் “எப்போதும் நம்பிக்கையற்ற மக்கள் அவநம்பிக்கையான செயல்களைச் செய்கிறார்கள்”. என்ற வாசகம் இருந்திருக்கிறது. இதைக் கண்ட அனைவரும் இந்த பதிவு தன்னுடைய முன்னாள் கணவரையும் சமந்தாவையும் மையப்படுத்தியே இருப்பதாக கூறி வருகின்றனர்.

இயக்குனர் ராஜ் நிதிமோரு ஃபேமிலி மேன் சீசன் 2 என்கிற ஓடிபி வெப் சீரியஸை சமந்தாவை வைத்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வெப் சீரியஸ் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2020 ஆம் ஆண்டு முடிந்தது. அதன் அடுத்த வருடம் (2021) சமந்தா விவாகரத்து பெற்ற. அதற்கு அடுத்த வருடம் (2022) இயக்குனர் ராஜ் நிதிமோரு விவாகரத்து பெற்றார்.
2024 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு (2025) நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மக்கள் பல்வேறு வகையில் தங்களது வியூகங்களை எடுத்து வைத்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
