தமிழ் சினிமாவில் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சிவகார்த்திகேயன் தனது அடுத்தப் படம் குறித்த அப்டேட்டை கூறியுள்ளார்.
2012-ம் ஆண்டு மெரினா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததுடன், தனது இயல்பான நடிப்பால் குறிப்பிட்ட இடைவெளியில் 24 படங்களை நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படம் ஹிட்டான நிலையில், திரையுலகில் தனது 14வது ஆண்டை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயனுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஆண்டுகள் செல்ல செல்ல பொறுப்பு மிகவும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்தார். கஷ்டங்கள், போராட்டங்களை தாண்டி மக்களின் அன்பை மட்டுமே பார்ப்பதாகவும், அதற்காக இன்னும் உழைக்க காத்திருப்பதாகவும்” கூறினார்.
மேலும், ”தன்னுடைய அடுத்தப் படத்திற்கான இயக்குநர், தயாரிப்பாளர், போன்றோர் தயாராக இருப்பதாகவும், மக்கள் எந்தமாதிரியான படத்தை என்னிடம் எதிர்பார்க்கிறார்களோ அதுபோன்ற படமாக அப்படம் அமையும் எனவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான படமாக இது அமையும்” எனவும் தெரிவித்துள்ளார்.
