பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் தனது 61ஆவது வயதில் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்ட செய்தி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் கௌரி ஸ்ப்ராட்டுடன் இவர் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
அமீர் கான் தனது தேர்ந்தெடுப்பில் மிகவும் கவனமானவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஒரு படத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு கதை, கதாபாத்திரம் மற்றும் திரைக்கதையை பலமுறை ஆராய்ந்து பார்ப்பார். இதனாலேயே அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றியைத் தழுவுகின்றன. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ரஜினியின் அழைப்பை ஏற்றுக்கொண்டது எப்படி என்று பலரும் வியந்தனர்.
அமீர் கானின் முதல் திருமணம் 1986ஆம் ஆண்டு ரீனா தத்தாவுடன் நடைபெற்றது. 2002 வரை நீடித்த இந்த உறவில் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். பின்னர் 2005ஆம் ஆண்டு இயக்குநர் கிரண் ராவுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். 2021ஆம் ஆண்டு இந்த தம்பதியர் பிரிந்தனர். தற்போது 61 வயதில் மகன்-மகள் முன்னிலையில் கௌரி ஸ்ப்ராட்டுடன் மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த செய்தி குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களை அதிகம் பாதித்துள்ளது. சமூக வலைதளங்களில் “நல்ல வேலை, நல்ல சம்பளம் இருந்தும் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் அலையும் நமக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் எங்கே வரும்?” என்று புலம்பும் மீம்கள் வைரலாகி வருகின்றன. அமீர் கானின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்து வருகிறது. அவரது தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டும் எப்போதும் விவாதப் பொருளாக மாறிவிடுகின்றன.
இந்த திருமணம் அமைதியான முறையில் நடைபெற்றாலும், பாலிவுட் உலகில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. அமீர் கானின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், சிலர் அவரது தனிப்பட்ட தேர்வுகளை விமர்சிக்கவும் செய்கின்றனர்.
