‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் 2ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
சரத்குமார், சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கொம்பு சீவி’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான அப்டேட் குறித்த அறிவிப்பை தெரிவித்தார்.
அதன்படி, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை மனதில் வைத்து கதையில் சில மாற்றங்களை செய்து வருவதாக கூறினார். கதை முழுமையாக தயாரானதும் சிவகார்த்திகேயனிடம் கூறி, அதனை அவர் ஒப்புக் கொண்டால் படத்தை தொடங்க இருப்பதாக பொன்ராம் தெரிவித்தார்.
