ரஷ்யா- உக்ரைன் இடையேயான மோதல் 3ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
2022 பிப்ரவரியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4வது ஆண்டை நெருங்கி வரும் போரில் ஏராளமான உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் டிரம்ப் விரைவுபடுத்தியுள்ளார். இந்தநிலையில், அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ரஷ்யா மற்றும் உக்ரைன் காலதாமதம் செய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்கள் வெறும் சந்திப்புக்காக மட்டுமல்லாமல் தீர்வுக்காகவும் ஆலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இருதரப்பு மோதலில் உயிரிழப்புகளை தடுக்க அமெரிக்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுக்கும் இடையே மோதல் தொடர்ந்தால் இது 3ம் உலகப் போருக்கு தான் வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
