உண்மையில் வடிவேலு- சுந்தர் -C காம்போவிற்காக தியேட்டருக்குள் நுழைந்தது. மற்றபடி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எப்படி தான் இருக்கிறது இந்த கேங்கர்ஸ்.?!

கதையென்றும் ஒன்றுமில்லை Money heist —யையும் , Mission Impossible -யையும் சுந்தர் – C அம்பாசமுத்திரத்தில் எடுத்தால் எப்படி இருக்கும். அதையே தான் எடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு.- பின்னனி இசை – பாடல் – எடிட்டிங் எல்லாமே சுந்தர்- C என்ன எதிர்பார்த்தாரோ அதையே கொடுத்து இருக்கிறார்கள். குறையொன்றுமில்லை.

வடிவேலுவை எல்லோரும் நாகேஷுக்கு நிகராக வைத்து பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மையில் அது அப்படி அல்ல என்பது என் கருத்து. வடிவேலு முழுக்க முழுக்க சந்திரபாபு உடல் மொழியை வெளிபடுத்துபவர். பாடல், நடனம் , நடிப்பு என்று முழுக்க முழுக்க சந்திரபாபுவையே அவர் Follow செய்கிறார். அது அவருக்கும் தெரிந்தும் தெரியாமலும் நடக்கிறது. அது ஒன்றும் குறையில்லை. ஏன் சொல்கிறேன் என்றால் மாமன்னன் போன்ற படங்களில் வடிவேலுவை நடிக்க வைப்பதென்பது வன்முறை என்பேன். நாகேஷ் போன்ற நடிகனுக்கு மட்டுமே சோகமான கதாபாத்திரங்கள் ஒர்க் அவுட் ஆகும். உண்மையில் மாமன்னனில் வடிவேலுவின் நடிப்பை குறை சொல்லவில்லை .அந்த பாத்திரத்தை பார்வையாளர்களாக நாம் ரசித்தோமா? என்பதே என் கேள்வி. கவுண்டமணி கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஆனால் அப்போதும் அவர் அந்த “கவுண்டர்”டெம்ப்ளேட்டை கைவிட்டது இல்லை. அது வடிவேலுக்கும் பொருந்தும்.

கேங்கர்ஸ் படம் முழுக்க வடிவேலு இருக்கிறார். அவருக்கு என்று தனி ஓப்பனிங் உடன் தொடங்கும் காட்சி. ராமதாஸ் உடன் சேரும் போது சிரிப்புக்கு பஞ்சமில்லை. இடைவேளை காட்சிகளில் சிரித்துக்கொண்டே இருக்கலாம் தான் என்ன நீண்ட சண்டை காட்சியை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

உண்மையில் இது ஒரு குடும்பங்கள் கொண்டாடும் வெறியாகத் தான் இருக்கப்போகிறது. அருகிலிருந்த குடும்பஸ்தனும் , வாண்டுகளும் சிரித்துக்கொண்டே இருக்கிறது. ” இது அவ்வளவு பெரிய ஜோக் இல்லையே என்று நம் மைண்ட் வாய்ஸ் நினைத்தாலும்.

உண்மையில் கடைசி 30 நிமிடம் அந்த தியேட்டர் காட்சிகள் எல்லாம் தெறிக்கவிட்டு இருக்கிறார்கள். சுந்தர்-C -வடிவேலு – ராமதாஸ் காம்போ.

Vijis Palanichamy

Share.
Leave A Reply

Exit mobile version