திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா ’ரெட்ரோ’ பட ஹிட்டைத் தொடர்ந்து அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ’கருப்பு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார். அதேப் போல நடிகை ஜோதிகா, பாலிவுட்டில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகன் தேவ் ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி வளாகத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யாவுக்கு, பக்தர் ஒருவர் சாமி சிலையை பரிசாக வழங்கினார்.