சினிமா உலகில் ஒரு சில நடிகை, நடிகர்கள் பல படங்களில் நடித்திருப்பர். திடீரென ஒரு சில படங்களில் அவர்களது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டு இருக்கு. அப்படியான ஒரு நடிகை சுவாஸிகா. சமீபத்தில் வெளியான சூரியின் மாமன் படத்தில் ஒரிஜினல் ஹீரொயின் என்றால் அது சுவாஸிகா தான். அக்கா கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டிருப்பார். இதற்கு முன்னதாக அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தில், ஹீரோயினின் தாயாகவும் நடித்து வரவேற்பை பெற்றார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் சுவாஸிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லப்பர் பந்து படத்தை ஷாருக்கான் பார்த்ததும், இந்த படத்தை ரீமெக் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும், அது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் கூறினார். அத்தோடு, சூர்யாவின் 45-வது படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷல் எனவும், இதுவரை நடித்தது போல் இல்லாமல் ஒரு சிறப்பான லுக்கில் இப்படத்தில் வரப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதைப்பற்றி இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதையும் பகிர்ந்த சுவாஸிகா, “இந்தக் கதாபாத்திரம் நீ இதுவரை செய்த எந்த வேடத்துக்கும் ஒத்தது இருக்காது. இது உனக்கே ஒரு புதிய அனுபவம் ஆகும் எனக் கூறியதாகவும், அதுவே தனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது,” என்றார். சூர்யாவின் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருவதும், அதில் சுவாஸிகாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version