Close Menu
    What's Hot

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.
    சினிமா

    சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!. சென்னை உயர்நீதிமன்றம்!.

    Editor web3By Editor web3January 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parasakthi high court 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

    நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கதையை பயன்படுத்தி பராசக்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாசிரியர் என பட இயக்குனர் சுதா கொங்குரா பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் புருஷோத்தமன் வாதிட்டார்.

    பட இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி எஸ் ராமன், அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், பராசக்தி படத்தில் கதையை 2020 ஆம் ஆண்டு இயக்குனர் பதிவு செய்திருக்கிறார். மனுதாரரின் செம்மொழி பட கதைக்கும், பராசக்தி பட கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. படத்தின் கதையை திருடி இருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படத்துக்கு தடை விதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராசக்தி படம் தயாரிப்பு குறித்து 2024 ஆம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம் தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    பராசக்தி படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“திராவிடம் என்பது தமிழனுக்கு எதிரானது அல்ல”!. திருமாவளவன் பேச்சு!
    Next Article பழைய ஓய்வூதிய விவகாரம்!. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!.
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமணம்!. பங்கேற்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடு!

    February 19, 2026

    செம ட்ரீட்!. மீண்டும் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம்!. ரெட் ஜெயண்ட் மூவிஸ் கொடுத்த அப்டேட்!.

    February 19, 2026

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி ஊழல்!. முக்கிய ஆவணத்தை வெளியிட்ட அதிமுக!

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    முடிந்த பேச்சுவார்த்தை!. தேமுதிக அதிருப்தியாளர்களை குறிவைக்கும் இபிஎஸ்!. ரகசிய அசைன்மெண்ட்!.

    மக்களே உஷார்!. தமிழகத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்!. போலீஸ் அதிரடி!

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026

    2026 சட்டமன்றத் தேர்தல்!. தொகுதிப்பங்கீடு குழு அமைத்தது திமுக!.

    February 21, 2026

    டிரம்பின் அடுத்த ‘வரி’ வேட்டை!. ஆடிப்போன உலகச் சந்தை!. இந்தியா தப்பிக்குமா?.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.