மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களில் மூத்த மகனான விஜய பிரபாகரன் அரசியலிலும், இளைய மகனான சண்முக பாண்டியன் தந்தையைப் போல் சினிமாவிலும் காலூன்றி வருகின்றனர். 2015ம் ஆண்டில் ’சகாப்தம்’, 2018-ல் ’மதுர வீரன்’ போன்ற படங்களில் நடித்தவர், தொடர்ந்து இயக்குநர் அன்பு இயக்கத்தில் ’படைத்தலைவன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ’கொம்பு சீவி’ என்ற படத்தில் நடித்துள்ளார் சண்முக பாண்டியன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என தொடர்ந்து நகைச்சுவை கலந்த குடும்ப படங்கள் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் பொன்ராம்.

இவரது இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அவருடன் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசயமைத்து வரும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version