The old guard 2 நெட் பிளிஸ் வந்திருக்கிறது..சாகவே முடியாதவர்கள் எப்படி தங்கள் இலக்கை அடைகிறார்கள் என்பதாக இருக்கிறது..
செம்ம ஷார்ப்பான சண்டைகள், சேசிங் காட்சிகள் என்று அபாரமாகவே வந்து இருக்கிறது. ஒரு சண்டை காட்சி இருக்கிறது ஏதோ பப்பில் இருப்பது போல எடுத்து இருக்கிறார்கள். அது தெருவில் தான் நடக்கிறது.
அந்த மியூசிக் நமக்கு அப்படி தோன்றவைக்கிறது. அது போகட்டும், Charlze அவரின் ஸ்டைலிஸான லுக் மட்டுமே இந்த திரைப்படத்தை பார்க்கவைக்கிறது. செம்ம மேனரிசம். ஒவ்வொரு பாத்திரங்களும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.Veronica, kiki Layane அதிலும் கீகி யின் அழகு சூப்பர்.
இவ்வளவு ஆக்ஷன் காட்சிகள் இருந்தும் எங்கேயும் வன்முறையின் தீவிரத்தை இந்த படத்தில் காட்டவே இல்லை. முழுக்க முழுக்க அழகாவே இருக்கிறது. இந்த படம்.
அவர்களின் டார்க் உலகம். அதில் யார் முதலில் பிறந்தது. எதற்காக umaa thurman தேடவேண்டும். அதன் பின்புலம் என்ன என்று மிக நிதனமாகவே சொல்லியிருக்கிறார்கள். ரன்னிங் டைமிங் சின்னதுதான். கூட கிருஸ்துவையும் வம்பு இழுத்திருகிறார்கள்.. “செம்ம நக்கல்யா!!! என்று புரிந்தது.
வெனிசுவாவில் வேறு கதை நடக்கிறது. அதன் பூர்விகம் அப்படி தான். “நான் முதல், நீ தான் கடைசி” என்று kimi-யிடம் Umaa Thurman சொல்லும் போது தெரிகிறது. அதன் காட்சியின் பிரேம் அப்படி தான் இருந்தது. அடுத்து தற்காப்பு கலைகள் சார்ந்த சினிமாக்களில் ஹாலிவுட் எப்போதே உச்சத்தை தொட்டுவிட்டது. இரண்டு சண்டை காட்சிகள் இருக்கிறது தலைவன் குராண்டினா பிச்சை எடுக்க வேண்டும்..
எதற்கும் guard முதல் பாகத்தை பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தை பாருங்கள். மூன்றாம் பாகத்திற்கு வேறு லீட் கொடுத்திருக்கிறார்கள்.
நெட்பிளிக்ஸ் இருக்கிறது. தமிழும் இருக்கிறது.