இவ்வளவு ஸ்ராங்கனா டிவின்ஸ் சார்ந்த ஒரு படத்தை பார்த்ததே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. தியேட்டரில் தவற விட்டதற்கு வருத்தம் தான் படவேண்டி இருக்கிறது. காரணம் நம்மவர்கள் எழுதும் பொறுப்பற்ற விமர்சனம்.
மிக அடர்த்தியான தீம் .அதை தொட்டு தொடர்கிற கதை. டுவின்ஸில் ஒருவர் பிரிந்தால் என்னவாகும்?. உண்மையில் அது தாங்கமுடியாத துயரத்தை அவர்களுக்கு கொடுக்கும். மாற்றான் படத்தில் வருவது போல. அதுவும் சிறுவயதில் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த இரட்டையர்களின் பள்ளி, அதை சார்ந்து நடக்கும் ஈகோ. அதை தொடர்ந்து நடக்கும் ஒரு கொலையில் இன்னொருவனின் இழப்பு. பின் அதற்கான பழிவாங்கல்!.படம் என்று தொடர்கிறது….
சிறுவர்கள் தங்களை தாய்- தந்தையராக மாற்றிக்கொள்ளும்.அந்த ஒரு காட்சியே போதும் டுவின்ஸ்களுக்கு நம்மை விட அவர்கள் ஏன் சேர்ந்து இருக்கிறார்கள்? என்று.!.. இது வழக்கம் போல இருக்கும் டுவின்ஸ் சார்ந்த சினிமா அல்லா…, என்பதை உணர்ந்து பார்த்தாலே போதும் இந்த ”லெவன் ”ஏன் ?முக்கியமான சினிமா என்று தோன்றும்
”11 ”ஒரே எண்கள் தானே? தனித்து இருந்தாலும் சேர்ந்து இருப்பதாலும் இருக்கும் பலம் புரிகிறது அல்லவா??? ஒன்றை இழப்பதின் வலி, அதற்கு பதில் என்ன கொடுத்தாலும் நமக்கு தீரவே தீராது. அது தான் நாயகன் எல்லோருக்கும் சொல்லும் பதில் ..அது உண்மையும் கூட தான்.. இழந்தவர்களுக்கே இழப்பின் தனிமையின் வலி தெரியும்.
இரவில் நடக்கும் காட்சிகளுக்கு நான் இருக்கிறேன் என்பது போல இருக்கிறது கார்த்திக் அசோக்கின் ஒளிப்பதிவு . இரட்டையர்களை வேறுபடுத்தி காட்டியிருப்பதில் எடிட்டர் ஸ்ரீ காந்தின் பங்களிப்பு சூப்பர். இமானின் பின்னணி இசை நாயகனின் துயரத்தை எப்படியும் கடத்திவிடுகிறது. அவன் தவறை நேர் செய்கிறது.நிவின் சந்திராவின் நடிப்பும்- அபிராமியின் நடிப்பும் தான் படத்தின் பலமே. கூடவே திலிபனும் சேர்ந்துக்கொள்கிறார். இயக்குநர் லோகேஷ் அஜிலிஸ் இயக்கமும் எழுத்தும் அதை தாண்டி அத்தனை இரட்டையர்களை ஸ்கீரினில் கொண்டு வந்த கச்சிதம். என்று பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.