திருப்பூர் ரிதன்யா வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை என்று ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவநாசி அருகே வசித்தவர் ரிதன்யா. அவர் திருமணமான 78 நாட்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். கணவர் மாமனார் மாமியார் சித்ரவதை தாங்க முடியவில்லை என தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பிய நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதன்பேரில் ரிதன்யாவின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டனர். ரிதன்யா பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததை தொடர்ந்து மாமியார் சித்ரா தேவி கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு அடுத்த நாளே அவருக்கு மட்டும் ஜாமீன் கேட்டு அவர் விண்ணப்பித்தார்.

இதற்கு ரிதன்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு வழங்கி உள்ளார். அதனை ஏற்று ஜாமீன் மனு விசாரணை 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை உடற்கூறாய்வு சோதனை முடிவு வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை. இந்த வழக்கில் தேவையான நேரத்தை காவல் துறையினர் எடுத்துக் கொள்கின்றனர். ஆர்‌‌.டி.ஓ. விசாரணை முடிவு மற்றும் உடற்கூறாய்வு முடிவுகள் வரும் போது உரிய தீர்வு கிடைக்கும். சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆடியோ அடிப்படையில் வழக்கு மாற்றி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர் என ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் சி.பி.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version