தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’குபேரா’ படத்திலிருந்து ’என் மகனே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் உட்பட இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இயக்கம் மட்டுமின்றி பான் இந்தியா படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ’குபேரா’ படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தா, ஜிம் சர்ப், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசிய பேச்சு இணையத்தில் வைரலகி வருகிறது. மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. சமீபத்தில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குபேரா படத்திலிருந்து 4-வது பாடலாக ’என் மகனே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவேகா எழுதியுள்ள இந்தப் பாடலை சிந்தூரி விஷால் பாடியுள்ளார். வரும் 20-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.