காமெடியில் கொடி கட்டி கலக்கிய சந்தானம், சமீப வருடங்களாக தனித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பாதி ஹிட் ஆவதும், பாதி சரியாக ஓடாமல் போவதுமாக உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் அவருடைய மார்க்கெட் நிச்சயமாக குறைந்துவிடும். இதை கருத்தில் கொண்ட சந்தானம் இனிவரும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்.

சந்தானம் புதிதாக க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தின் கதை விவாதத்திற்கு பிரபல கிரைம் திரில்லர் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரை சந்தானம் கடந்த வாரம் சந்தித்திருக்கிறார்.

https://x.com/RajeshNovelist/status/1990012444052459986?t=qoQmsfMkbzmSKy3xAI40Lg&s=19

இது சம்பந்தமான செய்தியை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவில் “தொலைபேசியில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஆரம்பத்திலேயே யார் என்று கண்டு விட்டேன். சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு சந்தானம், ஐயா எனது அடுத்த திரைப்படம் கிரைம் திரில்லர் சம்பந்தமான திரைப்படம். உங்களிடம் கதை விவாதம் செய்ய வேண்டும். நாளை கோயம்புத்தூர் வருகிறேன், என்று கூறினார். நான் கட்டாயம் வாருங்கள் என்றேன். சொன்னபடியே வந்தார் இரண்டு நாட்களில் கதை வாதம் திருப்தியாக நடந்து முடிந்தது.” இவ்வாறு ராஜேஷ் குமார் சந்தானம் உடன் நடந்த கதை விவாதத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவின் மூலம் கூறியுள்ளார்.

1500 க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000 த்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், அதுமட்டுமின்றி கதை விவாதம் திரைக்கதை டயலாக் என தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்சில் ராஜேஷ்குமார் தனது பணிகளை செய்து வருகிறார். குற்றம் 23, அக்னி தேவி மற்றும் யுத்த சத்தம் ஆகிய திரைப்படங்கள் அவரது கதையை தழுவி எடுக்கப்பட்டது. சரத்குமார் நடித்த சண்டமாருதம் திரைப்படத்தின் திரைக்கதாசிரியர் இவர்தான்.

கிரைம் திரில்லர் என்று வந்துவிட்டால் ராஜேஷ்குமார் சிக்சர் அடித்து விடுவார். எனவே சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version