திரைையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் – த்ரிஷா விவகாரம் குறித்து, முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார். காரணம், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து விஜய் இப்படி செய்தது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் டெக்ஸ்லா திரைப்படத்தின் நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பாலா உள்பட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சமுத்திரக்கனி நடிகர் விஜய்யின் செயலைக் குறிப்பிட்டு, ”இதெல்லாம் விளையாட்டா? யாரைப் பழிவாங்க இதைச் செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையைக் கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது எனப் புலம்புகிறார்கள்” என விஜய்யின் செயலை விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஏற்கனவே சமுத்திரக்கனி இதுகுறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இயக்குனரும் நடிகருமான பார்த்திபனும் இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக ஆனால் மிகவும் சூசகமாகப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷாவின் புகைப்படத்தைப் பார்த்த பார்த்திபன், தனது பாணியில் நயமாகவும் அதேசமயம் எச்சரிக்கையுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். த்ரிஷாவை ‘குந்தவை’ என்று குறிப்பிட்ட அவர், “இந்த குந்தவையை கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது” என்று தெரிவித்தார். அதாவது, தற்போதைய சூழலில் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க அவரை அமைதியாக (குந்த வைக்க) இருக்கச் செய்வது அல்லது வீட்டிலேயே இருக்க வைப்பது நல்லது என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

மேலும், கவிதைகளை உதாரணமாகக் கொண்டு அவர் பேசுகையில், “சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதையைச் சொல்லாமல் இருப்பது (வெளிப்படுத்தாமல் இருப்பது) நல்லது” என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தனிப்பட்ட விவகாரங்களை பொதுவெளியில் பேசி பிரச்சனையாக்காமல் இருப்பதே திரைத்துறைக்கு நல்லது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். பார்த்திபனின் இந்த “கவித்துவமான” விமர்சனம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version