தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாமல் அடிமட்டத்திலிருந்து படிபடியாக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடித்து பீட்சா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகானவர், தனது எதார்த்த நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
குறிப்பிட்ட வருடங்களில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டிற்கும் சென்றுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ”ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தை ஆறுமுக குமார் என்பவர் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் பெரிய வரவேற்பு இல்லாமல் சென்ற நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், வரும் 23-ம் தேதி படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது. திரைப்படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 36 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
