ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படத்துக்காக தொடர்ச்சியாக கதைகள் கேட்கும் படலத்தில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறியிருக்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக இருப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை ரஜினியின் பிறந்த நாளன்று அறிவிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version