பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது2 மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன் அன்பது குறித்து மனம் திறந்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான், தனது 21வது வயதில் ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜுனைத் என்னும் மகனும், ஐரா என்னும் மகளும் உள்ளனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களின் திருமணம் பந்தம் 2002 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து, 2005ல் கிரண் ராவை திருமணம் செய்தார். இவர் அமீர்கான் நடித்த லகான் திரைப்படத்தின் உதவி இயக்குநராவார். இந்த தம்பதிக்கு ஆசாத் என்கிற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து இந்த திருமணமும் முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் அண்மையில் தனது இரண்டு மனைவிகள் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவிடமிருந்து ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேட்டி ஒன்றில் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

21வயதில் ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்தபோது தனக்கு போதிய பக்குவம் இல்லை என்றும், வேலை வேலை என ஓடிக் கொண்டிருந்ததால் குடும்பத்தையும் குழந்தைகளையும் சரியாக கவனிக்காததும் பிரிவுக்கு முக்கியக் காரணம் எனவும் இதற்கு முழுக்காரணமும் தானே எனவும் கூறியுள்ளார்.

அதே நேரம், இரு மனைவிகளை பிரிந்தாலும் அவர்களுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார் அமீர்கான். சமீபத்திய விழாக்களில் ரீனா ரித்தா மற்றும் கிரண் ஆகிய இருவருடனும் அவர் ஒன்றாக கலந்து கொள்கிறார்.

அவரது மகன் ஜூனைத் கான் அறிமுகமாகும் படத்தின் தயாரிப்பு பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வரும் அமீர்கான், கௌரி ஸ்பார்ட் என்பவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version