நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
செட்டிகுளத்தில் ஜெயலலிதாவின் நினைவு தினம் முன்னாள் எம்.பி. சௌந்தரராஜன் தலைமையில்  கடைபிடிக்கப்பட்டது.  இதையொட்டி, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில்  ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பால்துரை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்கள் ராமச்சந்திரன், சுதர்சன்  மாவட்ட மகளிரணி இணை செயலாளர்கள் வசந்தி, கமலம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜம், செல்வி, கிளை கழக செயலாளர் சுயம்புதுரை மற்றும் கழக நிர்வாகிகள் குமரேசன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version