நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் 42 வது மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 42வது மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி சௌந்தர ராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தையும் சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார், துரைசாமி, நம்பிராஜன், குருசாமி முருகன், அதிமுக நிர்வாகிகள் அம்பிகாபதி, வினேஷ் ராஜா, முருகேசன், ராஜேஷ், நாராயணன், முருகராஜ், தர்மலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
