Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»ராசிபுரம் யாருக்கு ‘ராசி’புரம்? – இரண்டு கூட்டணிகளிலும் இப்போதே இழுபறி
    தேர்தல் 2026

    ராசிபுரம் யாருக்கு ‘ராசி’புரம்? – இரண்டு கூட்டணிகளிலும் இப்போதே இழுபறி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasipur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற அதிமுக வேட்பாளர் வி.சரோஜா சமூகநலத்துறைக்கு அமைச்சரானார்.

    அடுத்ததாக, 2021-ல் இங்கு வெற்றிபெற்ற திமுக-வின் மா.மதிவேந்தன், இப்போது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார். ராசிபுரத்துக்கு இப்படியொரு ‘ராசி’ இருப்பதால் இம்முறை இங்கு போட்டியிட இரண்டு முக்கிய கூட்டணியிலும் போட்டி கடுமையாக இருக்கிறது.

    அதிமுக கூட்டணியில், கடந்த முறை அவினாசியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் சபாநாயகர் தனபால் இம்முறை தனது பழைய தொகுதியான ராசிபுரத்துக்கு மாறிவிடும் யோசனையில் இருக்கிறார். தனபாலுக்குப் போட்டியாக, கடந்த முறை சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராசிபுரத்தைத் தவறவிட்ட முன்னாள் அமைச்சர் சரோஜாவும் இம்முறை, விட்ட இடத்தைப் பிடிக்கும் முடிவில் இருக்கிறார்.

    திமுக தரப்பில் அமைச்சர் மதிவேந்தனே மீண்டும் ராசிபுரத்தில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக-விலும் ராசிபுரத்து ராசியைக் கேள்விப்பட்டு அவர்களும் முட்டிப் பார்க்கிறார்கள்.

    அதிலும் குறிப்பாக, இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரான பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக வேட்பாளராக இங்கு போட்டியிட்டு தோற்றவர் என்பதால், இம்முறை அவர் பாஜக வேட்பாளராக களமிறங்க பல கணக்குகளைப் போட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

    தனக்கு இல்லாவிட்டாலும் தனது மகன் பிரேம்குமாருக்கு ராசிபுரத்தை ’ராசி’யாக்க வேண்டும் என்ற திட்டமும் துரைசாமிக்குள் இருக்கிறதாம்.

    இரண்டு முக்கிய கூட்டணிகளிலும் ராசிபுரத்துக்காக இத்தனை ரகசியத் திட்டங்கள் ஓடிக்கொண்டிருக்க, ராசிபுரத்து மக்கள் யாருக்கு தொகுதியை ராசியாக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் ரூ.208.50 கோடியில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    Next Article தினமும் முட்டை ஏன் சாப்பிட வேண்டும்? மருத்துவர் சொல்லும் காரணத்தை தெரிஞ்சுக்கோங்க!
    Editor TN Talks

    Related Posts

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    April 4, 2026

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    March 31, 2026

    தீய சக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா?. 5 வருடம் என்ன செய்தார்கள்?. விஜய் பேச்சு!

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.