Close Menu
    What's Hot

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?
    Featured

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    editor5By editor5July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 11 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி தொடர்ந்து பதற்றமான களமாக மாறியுள்ளது. நீட் (NEET) வினாத்தாள் கசிவு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தலைமையில் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் மோதல் ஏற்பட்டது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, கல் வீச்சு ஆகியவை அரங்கேறின. சில போராட்டக்காரர்கள் போலீசாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் ஏராளமான போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். டெல்லி முழுவதும் பதற்றம் நிலவிய நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் இன்னும் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், போராட்டங்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை 17ஆம் தேதியே டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ஜூலை 20ஆம் தேதி மத்திய டெல்லியில், குறிப்பாக ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றச் சுற்றுப்பகுதிகளில் பெருந்திரளான மக்கள் கூடக்கூடும் என்றும், ஜூலை 21ஆம் தேதி கிசான் காட்டில் விவசாய அமைப்புகள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    image 12 9மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் இந்தப் போராட்டங்கள் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும், போக்குவரத்து முடக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டது. மத்திய டெல்லியைத் தவிர்க்குமாறும், போராட்டப் பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அமெரிக்க தூதரகம் கேட்டுக் கொண்டது. பயண ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்கவும், STEP திட்டத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த முன்கூட்டிய எச்சரிக்கை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “போராட்டத் திட்டங்கள் அமெரிக்க தூதரகத்துக்கு நான்கு நாட்களுக்கு முன்பே எப்படித் தெரிந்தது? இந்தப் போராட்டத்தின் பின்னணியில் வெளிசக்திகள், குறிப்பாக அமெரிக்கா ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?” எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக ஊடகங்களில் இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

    NEET தேர்வு கசிவு விவகாரம் ஏற்கெனவே நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளன. போராட்டம் அமைதியான முறையில் இருக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகம் வலியுறுத்தியுள்ள போதிலும், பதற்றம் நீடிக்கிறது.

    America Delhi Protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!
    Next Article தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!
    editor5

    Related Posts

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    July 22, 2026

    18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??

    July 22, 2026

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    18 வயதில் விபத்தில் பறிபோன இளம் நடிகையின் உயிர்..!! சோகத்தில் திரையுலகம்..!! யார் தெரியுமா..??

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.