ஒவ்வொர் ஆண்டும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறுபிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகளை இன்று மாலை 5.30 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன.

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு இந்த விருதுகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு பல்வேறு மொழித் திரைப்படங்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டன.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை  ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’ மற்றும் ‘நந்தன்’ போன்ற படங்கள் தேசிய விருதுக்கான வலுவான போட்டியில்  இருந்தன.

மலையாளத்தில் ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘ஆடுஜீவிதம்’ மற்றும் தெலுங்கில் ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

‘பிரம்மயுகம்’ படத்திற்காக மம்மூட்டி மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திற்காக பிரபாஸ் போன்றோரின் நடிப்பும், நடிகை சாய் பல்லவியின் நடிப்பும் விருதுக்கான எதிர்பார்ப்புகளில் முன்னணியில் உள்ளன.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version