இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.
நாளை பிரதமர் மோடி தலைமையில் 10 வது நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களும் கலந்து கொள்ள அழைப்பதில் விடுக்கப்பட்டுள்ளது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று காலை 9:30 மணி அளவில் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்று டெல்லி செல்ல உள்ளார்.
பிற்பகல் 12. 50 மணிக்கு டெல்லி செல்லும் முதலமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர் அதனை தொடர்ந்து முதலமைச்சர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை எட்டு முப்பது மணி அளவில் தமிழ்நாடு இல்லத்திலிருந்து புறப்பட்டு ஒன்பது மணிக்கு பாரத் மண்டபம் சென்று அங்கு நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மேலும் தெரிந்துகொள்ள: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்.. பரவும் வதந்திகள் உண்மையா?
குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கவில்லை கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை நிலுவையில் இருந்த நிதிகளையும் விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக அரசு புறக்கணித்து இருந்தது. நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்த பிறகு நாளை இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்படுகிறார்.